Donation

பீஸ் பவுண்டேஷன் நிறுவனத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நிவாரண பொருட்கள் வழங்கிய நிகழ்வுகள் :

இறைவனின் பேரருளால், நமது பீஸ் பவுண்டேஷன் நிறுவனம் கொரோனா பேரிடர் காலத்தில், பல மக்கள் வேலையின்மை காரணமாக பல இன்னல்களையும், பல கஷ்டங்களையும், அனுபவித்தனர்.இதைக்கண்டநமது பீஸ் பவுண்டேஷன் நிறுவனம், தன்னால் முடிந்த பல உதவிகளைசெய்ய ஆரம்பித்தது. அதில் முதல் கட்டமாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்ளே வெளியே உணவு இல்லாமல் கஷ்டப்படக்கூடிய சுமார் 400 முதல் 500 நபர்களுக்கு, மதிய உணவு மற்றும் உதவித்தொகை ஆகியவைகளை வழங்கியது மற்றும் பல கிராமங்களுக்கு கபசுர கசாயம், முகக்கவசம் ஆகியவைகளையம் வழங்கியது


அதே போன்று, 05-07-2021 கொட்டகுடி மனையில் வைத்து ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்குஅரிசி மளிகை சாமான்கள், நிதி உதவிகள் ஆகியவையை வழங்கியது நமது நிறுவனம்


சிவகங்கை

கொட்டகுடி

04-07-2021 ஞாயிற்றுக்கிழமை, காலையில் சிவகங்கை மாவட்டத்திலும், அன்று பிற்பகல் 12:00 மணி அளவில் மதுரை மாவட்டம் , கொட்டகுடி மனைப்பிரிவில் வைத்து மேலூர் சுற்றுவட்டாரங்களில் கஷ்டப்படும் அனைவருக்கும் அரிசி, மளிகை சாமான்கள்,நிவாரண தொகை ஆகியவைகளை வழங்கியது நமது பீஸ் பவுண்டேஷன் நிறுவனம் ஆகும்


31-10-2021 கொட்டகுடி மனையில் வைத்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கஷ்டப்படக்கூடிய இந்து சமுதாய தொப்புள்கொடி உறவுகளுக்கு அரிசி, மளிகை சாமான்கள், நிதி உதவிகள், ஆடைகள் ஆகியவைகளை வழங்கியது நமது நிறுவனம் ஆகும்..


கொட்டகுடி

ஒரு முக்கிய உறுதிமொழியை எடுத்தது நமது நிறுவனம். அது என்னவென்றால், நம் நிறுவனர் அவர்கள் விவசாயம் செய்து கொண்டு இருந்தபோது, இந்த விவசாயத்தில் வரும் நெல்லை அரிசியாக்கி அதை முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்க முடிவு செய்தார். நீங்கள் நினைக்கலாம், அது எப்படி முழுவதுமாக ஏழைகளுக்கு கொடுக்க முடியும் என்று, ஒன்றே ஒன்று தான். நீங்கள் ஏழைகளுக்கு கொடுக்க நினைத்தால் இறைவன் உங்களுக்கு கொடுப்பான் உங்களை ஒரு போதும் ஏழையாக்க மாட்டான். இதை மனதில் நினைத்தால் போதும். எனவே, விவசாயத்தில் வரக்கூடிய நெல்லை முழுவதுமாக ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரகாரம் 2021 ம் ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய நான்கு மாதங்கள் விவசாயம் செய்து, அந்த மண்ணில் பல பேர் கஷ்டப்பட்டு உதாரணமாக. மாமா முகமது சாதிக், ஐயா சாகுல் மற்றும் ஊர் கிராம மக்கள் ஆகிய அனைவரது உழைப்பால், ஜனவரி மாதம் அறுவடை செய்யப்பட்டு, வந்த மொத்த நெல் மூடைகளை அப்படியே அரிசி ஆலையில் கொடுக்கப்பட்டு, அரிசியாக்கி அந்த அரிசியை ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் பேக்கிங் செய்யப்பட்டது. மேலும், அத்துடன் சேர்த்து, 15 மளிகை பொருட்கள் அடங்கிய பேக்கிங்களும் பேக்கிங்செய்யப்பட்டது. ஆக பேக்கிங் செய்யப்பட்ட, அரிசி, மளிகை சாமான்கள், மற்றும் கணவனை இழந்தவர்களுக்கு உதவித்தொகை, பிள்ளைகள் இல்லாத மற்றும் தான் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான பெரியவர்களுக்கு உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டன.


முதல் கட்டமாக 17-04-2022 ஞாயிறு காலை சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 50 குடும்பங்களுக்கும் ,


இரண்டாம் கட்டமாக 17-04-2022 ஞாயிறு பிற்பகல் மதுரை மாவட்டம் மேலூர் - தும்பைப்பட்டியில் சுமார் 200 குடும்பங்களுக்கும்,


மூன்றாம் கட்டமாக 21-04-2022 வியாழன் ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 குடும்பங்களுக்கும்,


நான்காம் கட்டமாக தேவகோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய பகுதியில் சுமார் 100 குடும்பங்களுக்கும்


ஐந்தாம் கட்டமாக 21-04-2022 வெள்ளிக்கிழமை மதுரை தலைமை அலுவலகத்தில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் வர வைக்கப்பட்டு, ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு,, சுமார் 50 முதல் 75 குடும்பங்களுக்கு உதவிகள் செய்யப்பட்டது.


இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 2023 ம் வருடம் சுமார் 1000 குடும்பங்களுக்கு உதவிகள் நமது நிறுவனம் செய்ய நிய்யத் செய்திருக்கிறது. இதை நிறைவேற்ற இறைவன் உதவி செய்வானாக ஆமீன் ! 19-04-2022 செவ்வாக்கிழமை நமது தொப்புள் கொடி உறவான மாற்று மத சகோதரர்களின் கோவில் விசேஷங்களில் நமது நிறுவனத்தின் சார்பாக மதுரை மாநகரின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கோவில் விசேஷத்திற்கு நடந்து வரக்கூடிய அனைத்து உறவுகளுக்கும் தண்ணீர், மோர் ஆகியவற்றை வழங்கியது நமது பீஸ் பவுண்டேஷன் நிறுவனம் ஆகும்.


இன்ஷா அல்லாஹ் இன்னும் ஏழை, எளிய மக்களுக்கு பல பல சேவைகள், உதவிகளை செய்ய PEACE குடும்பத்திற்கு நமது, வாடிக்கையாளர்கள், நண்பர்கள், பெரியோர்கள், உலமாக்கள் பிரார்த்தனை (துஆ) செய்யவும். மேலும், எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும, ஒட்டு மொத்த உலகத்தின் ஒற்றுமைக்காகவும் அனைவரும் துஆ (பிரார்த்தனை) செய்யவும்.