நமது பீஸ் பவுண்டேஷன் நிறுவனம் நமது PROJECT யில், அதாவது நாம் விற்று முடித்த மனைகளில் வீடுகள் உருவாகவும், அதில் வீடுகள் உருவான பிறகு, அந்த மக்களிடத்தில் ஒற்றுமை, தேசிய உணர்வு, சகோதரத்துவம் ஆகியவற்றை உருவாக்கும் ஒரு புதிய முயற்சியை நமது மனைகளில்செய்தது. அது என்னவென்றால், வருடத்திற்கு இரண்டு முறை வரக்கூடிய ஜனவரி 26 குடியரசு தினம் & ஆகஸ்ட் 15, சுதந்திர தினம் ஆகிய இரு தினங்களிலும் தேசியக் கொடியேற்றப்பட்டு, சிறப்பு நிகழ்ச்சிகள் நமது மனைகளில், வாடிக்கையாளர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டன