Patta Service

நமது பீஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இதர சேவைகள் :

முதல் சேவையாக -> நமது நிறுவனம் நம்மிடத்தில் மனை வாங்கிய அனைவருக்கும் அவர்கள் வாங்கிய மனைக்கு உரிய தனிப்பட்டாவை வாங்கி கொடுத்தது. அதன் அடிப்படையில், கூடுவாஞ்சேரி , செங்கல்பட்டு, மேலவலம்பேட்டை, கருங்குழி, மதுராந்தகம் மேல்மருவத்தூர், காஞ்சிபுரம், சிங்கப்பெருமாள்கோவில், சிவகங்கை மாவட்ட பகுதிகள் மதுரை - அலங்காநல்லூர், மதுரை மேலூர் -அடுத்த தும்பைப்பட்டி, மதுரை ஒத்தக்கடை அடுத்த திருவாதவூர் - கொட்டகுடி, சிவகங்கை - இடையமேலூர் ஆகிய பகுதிகள் ஆகும்.

மேலும், நமது நிறுவனம் DTCP APPROVAL பெற்ற மனையில் முழு தொகை மற்றும் தவணை முறையில் மனை வாங்கிய அனைத்து வாடிக்கை நண்பர்களுக்கும், வேறுபாடு பார்க்காமல் தனிப்பட்டாவை வாங்கி கொடுத்தது.

பொதுவாக எந்த நிறுவனமும் முழு தொகையை பெறாமல், தனிப்பட்டா வாங்கி கொடுக்கமாட்டார்கள். ஆனால் நமது பீஸ் பவுண்டேஷன் நிறுவனம் தவணை முறையில் மனை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கவும், அவர்கள் மீது நம் நிறுவனம் நம்பிக்கை வைத்தும், அவர்களுக்கு தனிப்பட்டாவை வாங்கி கொடுத்தது.

மேலும், தவணை முறை வாடிக்கையாளர்கள், தவணை தொகையை முழுமையாக செலுத்தி ORIGINAL DOCUMENT, PARENT DOCUMENT ஐ பெற்ற உடன் வாடிக்கையாளர்கள் தனிப்பட்டாவிற்காக வேண்டி VAO OFFICE, தாலுகா OFFICE, சர்வேயர் என தேடி அலையக்கூடாது என்பதற்காக வேண்டியே, அவர்கள் மனையை பத்திரப்பதிவு செய்த உடனே வாடிக்கையாளர்கள் ஒப்புதலுடன் நாங்களே தனிப்பட்டவை வாங்கி கொடுக்கும் சேவையை செய்கிறோம். பிறகு அவர்கள் முழுத்தொகை கொடுத்த உடனே ORIGINAL DOCUMENT, PARENT DOCUMENT உடன் சேர்த்து தனிப்பட்டவையும் பெறுகிறார்கள்.