பீஸ் பவுண்டேஷன் நிறுவனம் உருவான விதம் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு :

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்பார்ந்த சொந்தங்களே நமது பீஸ் பவுண்டேஷன் நிறுவனம் கடந்த 10-05-2008 ம் ஆண்டு சென்னை – கோடம்பாக்கத்தை தலைமை அலுவலகமாக கொண்டு, முதன் முதலாக துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

நமது பீஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் நோக்கம் : ஏழை, எளிய, நடுத்தர மக்களில் யார், யாரெல்லாம் வாடகை வீட்டில் வாழ்கிறார்களோ அவர்கள் மற்றும் அந்த வாடகை பணத்தை மாதம் மாதம் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் என்றைக்காவது ஒரு நாள் சொந்த வீட்டு மனையை வாங்கி, அதில் வீடு கட்டி, தன் குடும்பத்தோடு குடி பெயர்ந்து, சந்தோஷமாக வாழ மாட்டோமா என்ற ஏக்கத்தில் வாழக்கூடிய ஒவ்வொருவரின் ஆசையை நிறைவேற்ற நமது நிறுவனம் ஒரு உறுதிமொழியை எடுத்தது. அதையே தனது நோக்கமாக ஆக்கிக்கொண்டது .அது தான், இன்ஷா அல்லாஹ் 2030 ம் ஆண்டுக்குள் சுமார் 50,000 குடும்பங்களுக்கு சொந்த வீட்டு மனையை கொடுக்க வேண்டும் என்பதாகும். இதுவே நிறுவனத்தின் நோக்கம் ஆகும். இந்த நோக்கம் நிறைவேற இறைவன் உதவி செய்வானாக. ஆமீன் !


நமது பீஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் “50,000 ஏழை,எளிய, நடுத்தர குடும்பங்களுக்கு சொந்த மனை கொடுக்க வேண்டும்” என்ற நோக்கம் உருவாவதற்கான காரணங்கள் :

பொதுவாக இன்றைய காலகட்டத்தில், அனைத்து ஏழை,எளிய நடுத்தர மக்கள் மனதில் 3 விஷயங்கள் ஓடிக்கொண்டே இருக்கும் .


  • வாடகைக்கு வீடு கேட்டு செல்லும் போது, உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற கேள்வி NON-VEG சாப்பிடுவீர்களா? என்ற கேள்வியும் HOUSE OWNER கேட்கிறார்களே என்ற எண்ணம். ?
  • வாடகை வீட்டில் குடி பெயர்ந்த பிறகு 1 முதல் 10 ம் தேதி வருவதற்குள், HOUSE OWNER வாடகை பணம் கேட்கவருவாரே அவருக்கு , வாடகை பணம் சரியாக எடுத்து வைக்க வேண்டுமே என்ற எண்ணம்
  • நாம் என்றைக்காவது ஒரு நாள் சொந்தவீடு வாங்கமாட்டோமா ? அந்த சொந்த வீட்டில் நாமும், நமது குடும்பமும், குடி பெயர்ந்து சந்தொஷமாக வாழ மாட்டோமா என்ற எண்ணம்.

ஆகிய இந்த மூன்று எண்ணமும் சொந்த வீடு, சொந்த மனை இல்லாத அனைத்து சகோதர, சகோதரிகளின் மனதில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். எனவே, இந்த எண்ணங்களை அவர்கள் மனதில் இருந்து எடுத்து விட்டு, இவர்களின் சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியோடு ஆரம்பிக்கப்பட்டது தான், நமது பீஸ் பவுன்டேஷன் நிறுவனம் ஆகும். இதுவே நமது நிறுவனத்தின் நோக்கம் ஆகும் எனவே இவர்களது சொந்த வீட்டுக்கனவை நனவாக்குவது எப்படி என்ற கேள்வியின் முதல் விடையே, முதலில் இவர்கள் சொந்தமாக வீட்டு மனையை வாங்க வேண்டும். எனவே, இதை கருத்தில் கொண்டு, நமது பீஸ் பவுன்டேஷன் நிறுவனம், தனது முதல் FIRST PROJECT ஐ சென்னை - செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகத்தில் மிக மிக குறைந்த விலையில் தனது FIRST PROJECT ஐ LAUNCH செய்தது. அதன் விபரம் அதாவது ஒரு சதுர அடியின் விலை ரூ : 80/-. ஒரு சென்டின் விலை ரூ : 34,880 என நிர்ணயித்து பிளாட்டின் விலை அதாவது 1200 சதுர அடியின் விலை ரூ : 96,000/- மட்டுமே என நிர்ணயித்து விற்பனையை ஆரம்பித்தது. இந்த 1 பிளாட்டின் விலை 96,000 தொகையை, மொத்தமாக செலுத்தாமல் மாத தவணை முறை அடிப்படையில், பிரித்து மாதம் ரூ : 2,000/- முதல் ரூ : 5,000/- வரை செலுத்தலாம் என்ற முறையை அறிமுகம் செய்தது. இதனால் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்றனர். இந்த மனைகளில் ஏழை,எளிய மக்கள் வீடும் கட்டினார்கள். இறைவன்பேரருளால் இந்த FIRST PROJECT ஐ சரியாக 3 மாதத்தில் நிறைவு செய்தது நமது நிறுவனம். இறைவனுக்கு நன்றி ! இறைவனின் பேரருளால், நமது நிறுவனத்தின் FIRST PROJECT யின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து PROJECT களை கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு அடுத்த - மாமண்டூர், மேலவலம்பேட்டை, கருங்குழி, மதுராந்தகம் மேல்மருவத்தூர், காஞ்சிபுரம் - பனப்பாக்கம் ஆகிய இடங்களில் தவணை முறை அடிப்படையிலேயே வீட்டு மனைகளை விற்பனை செய்தது நமது நிறுவனம்.

நமது பீஸ் பவுண்டேஷன் நிறுவனம், சென்னையை சுற்றி உள்ள PROJECT களின் வெற்றியை தொடர்ந்து, சென்னையின் தென் பகுதியில் அதாவது சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டத்தில் NEW PROJECT விற்பனையை துவங்க ஆரம்பித்தது

Customers Reviews